close
Choose your channels

வெங்கட்பிரபுவின் அடுத்த படம்... நாயகி கேரக்டரின் போஸ்டர் வைரல்!

Wednesday, January 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் அடுத்த படத்தின் நாயகியாக நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி கேரக்டர் பெயர் குறித்த போஸ்டர் வெளியாகி உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’கஸ்டடி’. தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் மே 12ஆம் தேதி வெளியாகும் என சில நாட்களுக்கு முன்னால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் நாக சைதன்யா போலீஸ் கேரக்டரில் நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது கேரக்டர் ரேவதி என சற்றுமுன் அவரது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஆக வெளியான நிலையில் , இந்த போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்து வரும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment