close
Choose your channels

'எல்.ஐ.சி' படப்பிடிப்பை தொடங்கினார் விக்னேஷ் சிவன்.. லொகேஷன் எது தெரியுமா?

Tuesday, January 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ’எல்ஐசி’ அதாவது ’லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பை தொடங்கி விட்டதாகவும் இனிமேல் ஓய்வே இல்லாமல் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெறும் என்றும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தொடங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படப்பிடிப்பு குறித்த புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது

இந்த நிலையில் ’எல்.ஐ.சி’ என்ற டைட்டிலை பயன்படுத்தக்கூடாது என்று ஏற்கனவே எல்.ஐ.சி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இருப்பினும் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் டைட்டிலை மாற்றாமல் எல்ஐசி என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.