இந்த உலகில் இடது, வலது என இரண்டு தான், மய்யம் என்ற ஒன்றே கிடையாது: வெற்றிமாறன்

இந்த உலகில் இடது மற்றும் வலது என இரண்டே இரண்டு தான் என்றும் மய்யம் என்ற ஒன்றே கிடையாது என்றும் மய்யம் என்று சொல்வோரும் வலதுசாரி தான் என்றும் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

கேரளாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறன் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் குறித்து பேசியபோது ’இன்றைய உலகம் பிளவுபட்டு உள்ளது என்றும், ஒன்று நீங்கள் இடதுசாரியாக இருக்க வேண்டும் அல்லது வலதுசாரியாக இருக்க வேண்டும் என்றும், மய்யம் என்ற ஒன்றே கிடையாது என்றும், மய்யம் என்று சொல்பவர்களும் வலதுசாரி தான் என்றும், ஆனால் அதை தேர்வு செய்வதற்கான நேரத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் கூறினார்.

மேலும் இந்த உலகில் நடப்பதை தான் நாங்கள் திரைப்படங்களில் காட்ட முடியும் என்றும் ஒருவேளை இந்த ஒட்டுமொத்த அரசியல் சூழலும் மாறினால் வித்தியாசமான படங்களை எடுக்கலாம் என்றும் கூறினார்.

மேலும் இந்த உலகத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வேன் என்றும் அதிலிருந்து கதையை தேடுவேன் என்றும் நான் எப்போதும் ஒரு கதையை தேர்வு செய்தபின் ஒரு உலகத்தை அதை பொருத்த மாட்டேன் என்றும் தெரிவித்தார் .

இந்த உலகத்தில் நான் கற்றுக்கொள்ள, புரிந்துகொள்ள அல்லது அதிலிருந்து வெளியே செல்ல ஏதாவது இருந்தால் அங்கு செல்வேன் என்றும், அங்குள்ள மக்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வேன் என்றும் அவர்கள் பிரச்சினைகளை தெரிந்து கொள்வேன் என்றும் அதை வைத்து கதை தயாரிக்க முயற்சிப்பேன் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.

ஒரு இயக்குனர் என்பவர் அரசியல்வாதியோ, கணிதமேதையோ, விஞ்ஞானியோ அல்ல என்றும் அவர் ஒரு கலைஞர் தான் என்றும், அவர் எந்த பிரச்சனைக்கும் தீர்வு சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை என்றும், தான் வாழ்ந்த உலகில் கண்டதை அவர் திரையில் பிரதிபலிக்கிறார் என்றும் கேள்வி ஒன்றுக்கு இயக்குனர் வெற்றிமாறன் பதிலளித்தார்.

More News

துணை முதல்வர் சீட் கொடுத்ததும் திமிர் வந்துருச்சு: 'இடியட்' ஸ்னிக்பிக் வீடியோ 

துணைமுதல்வர் சீட் கொடுத்ததும் திமிர் வந்துருச்சு என்ற வசனம் இடம் பெற்றிருக்கும் மிர்ச்சி சிவாவின் 'இடியட்' திரைப்படத்தின் ஸ்னிக்பிக் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

முதல் நாளிலேயே ரூ.200 கோடி வசூல் செய்யுமா 'ஆர்.ஆர்.ஆர்'?

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் நாளைய முதல் நாளில் இந்த படம் ரூபாய் 200 கோடி வசூல் செய்ய வாய்ப்பு

முடக்கப்பட்ட கெளதமியின் 6 வங்கிக்கணக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

விவசாய நிலத்தை விற்பனை செய்த வழக்கில் நடிகை கவுதமியின் 6 வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

திரைப்படமாகும் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு: இயக்குனர் யார் தெரியுமா?

முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த ஆனந்த கண்ணன் பிறந்த நாளில் மனைவியின் நெகிழ்ச்சியான பதிவு!

சன் டிவியில் ஆங்கராக இருந்த ஆனந்த கண்ணன் சமீபத்தில் புற்றுநோயால் மறைந்த நிலையில் அவருடைய பிறந்த நாளில் அவருடைய மனைவி நெகிழ்ச்சியான பதிவு செய்துவிள்ளது இணையதளங்களில் வைரலாகி வருகிறது .