பணப்பெட்டியை எடுத்த பூர்ணிமாவை விட விசித்ராவுக்கு அதிக சம்பளமா? எத்தனை லட்சம் தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,January 07 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னருக்கு அடுத்தபடியாக பூர்ணிமாவுக்கு தான் அதிகப்படியான பணம் கிடைத்ததாகவும் அவருக்கு சம்பளமாக 14 லட்சம் பண பெட்டி மூலம் 16 லட்சம் என மொத்தம் 30 லட்ச ரூபாய் கிடைத்ததாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் விசித்ராவுக்கு பூர்ணிமாவை விட அதிக சம்பளம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அதிக சம்பளம் பெறும் போட்டியாளர்களில் ஒருவர் விசித்ரா என்றும் அவருக்கு தினமும் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது

அந்த வகையில் அவர் 95 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததால் அவருக்கு 35 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கலாம் என செய்திகள் வெளியாகி உள்ளது. பூர்ணிமாவுக்கு பணப்பெட்டியில் கிடைத்த தொகையுடன் சேர்த்து 30 லட்சம் மட்டுமே கிடைத்த நிலையில் பணப்பெட்டி இல்லாமல் விசித்ராவுக்கு கூடுதலாக 5 லட்ச ரூபாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை விசித்ரா பணப்பெட்டியை எடுத்திருந்தால் கிட்டத்தட்ட டைட்டில் வின்னருக்கு இணையாக அவருக்கு சம்பளம் கிடைத்திருக்கும் என தெரிகிறது.

More News

ஜனவரி 26ல் வெளியாகும் 4 படங்கள்.. அடுத்த வாரத்திலேயே வரும் சந்தானம் படம்..!

ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விருந்தாக 4 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு அடுத்த வாரம் சந்தானம் நடித்த அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ்

குளிர் காய்ச்சலா? சூரியன் பக்கத்துல வாங்க.. கலைஞர் குறித்து ரஜினிகாந்த் பகிர்ந்த சம்பவம்..!

நேற்று 'கலைஞர் 100' என்ற விழா சிறப்பாக நடந்ததை அடுத்து இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடைசி வாரத்திலும் காலை வாரும் போட்டியாளர்கள்.. தனித்திறமை பற்றி கூறுவதில் சர்ச்சை..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரத்தில் அடியெடுத்து வைக்கும் நிலையிலும் கூட போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் காலை வாரும்  காட்சி இன்றைய இரண்டாவது புரமோவில் உள்ளது.

யார் வெளியே போவார்கள் என சரியாக கணித்த தினேஷ்.. விஷ்ணு சொன்னது என்ன தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்று ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்படுவார் என்பது தெரிந்தது. அதிகாரபூர்வமற்ற வாக்கெடுப்பில் மாயா குறைந்த

'அயலான்' படத்தை அடுத்து ரவிகுமாரின் திட்டம்.. மாஸ் நடிகரிடம் பேச்சுவார்த்தை..!

ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'அயலான்' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில்  ரவிக்குமாரின் அடுத்த படம் குறித்த தகவல் கசிந்துள்ளது.