close
Choose your channels

மீண்டும் தள்ளிப்போகும் 'விடுதலை 2': அப்ப 'வாடிவாசல்' எப்போது?

Saturday, November 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்த ’விடுதலை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக தயாராகி வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் வரும் ஜனவரி மாதம் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் இன்னும் சில காட்சிகள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வந்துள்ள தகவலின்படி ’விடுதலை 2’ படம் வரும் கோடை விடுமுறையில் தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜனவரி 26ஆம் தேதி விக்ரம் நடித்த ’தங்கலான்’ திரைப்படம் ரிலீஸ் ஆவதால் அதே தேதியில் ‘விடுதலை 2’ படத்தையும் ரிலீஸ் செய்ய பட குழுவினர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஏப்ரலில் தான் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, பாலாஜி சக்திவேல், சரவண சுப்பையா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படம் ஜெயமோகன் வசனத்தில், வெற்றிமாறன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், ஆர் வேல்ராஜ் ஒளிப்பதிவில், ராமர் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.