close
Choose your channels

வித்யாபாலனுக்கு பிடித்த கமல்ஹாசன் படம்!

Wednesday, October 16, 2019 • தமிழ் Comments

பிரபல பாலிவுட் நடிகையும் தேசிய விருது பெற்றவருமான நடிகை வித்யாபாலன் சமீபத்தில் தல அஜித்துடன் 'நேர்கொண்ட பார்வை' என்ற திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார். இந்த படத்தில் அவரது காட்சிகள் ஒரு சில நிமிடங்களே இருந்தாலும் ரசிகர்களை மிகவும் கவர்ந்த காட்சிகளாக இருந்தது. 

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தனக்கு மிகவும் பிடித்த கமலஹாசன் நடித்த 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தை தனது கணவருடன் சேர்த்து பார்த்ததாகவும், இந்த படம் தன்னுடைய ஆல்டைம் ஃபேவரைட் படம் என்றும் சமூக வலைத்தல பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கமல்ஹாசன் ஊர்வசியின் காதல் காட்சிகளும் 'திருப்பு... திருப்பு... என்று கமல்ஹாசன், ஊர்வசியை கொஞ்சும் காட்சிகளும் தன்னை மிகவும் கவர்ந்த காட்சிகள் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் வித்யாபாலன் தற்போது கணித மேதை சகுந்தலா தேவி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  கமலஹாசன் குறித்து பெருமையுடன் பேசிய வித்யா பாலன் விரைவில் அவருடன் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Get Breaking News Alerts From IndiaGlitz