close
Choose your channels

'இந்தியன் 2' படத்தில் இணைந்த அஜித், விஜய், சூர்யா பட நடிகர்!

Wednesday, July 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் 'இந்தியன்-2'. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த படத்தில் சமீபத்தில் ப்ரியா பவானிசங்கர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் வித்யூத் ஜம்வால் அவர்கள் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே அஜீத் நடித்த 'பில்லா 2' விஜய் நடித்த 'துப்பாக்கி', சூர்யா நடித்த 'அஞ்சான்' உட்பட பல திரைப்படங்களில் வில்லன் வேடங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்திற்காக வித்யூத் ஜம்வால் களறி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இதே படத்திற்காக நடிகை காஜல் அகர்வாலும் களறி பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் என்பது தெரிந்ததே

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.