'தல' நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்த விக்னேஷ் சிவன்

  • IndiaGlitz, [Saturday,October 27 2018]

இந்திய கிரிக்கெட் அணி இன்று மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 3வது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியை அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி-20 தொடர் தொடங்கவுள்ளது. அதனையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் இந்திய அணி டி-20 தொடரில் விளையாடவுள்ளது.

இந்த நிலையில் நேற்று இந்திய டி-20 அணி அறிவிப்பு வெளியானது. இந்த அணியில் 'தல' தோனி நீக்கப்பட்டிருந்தார். தோனியின் நீக்கத்திற்கு அவரது அபிமானிகள், ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆஸ்திரேலிய தொடருக்கு தோனியின் அனுபவம் நிச்சயம் கேப்டன் விராத் கோஹ்லிக்கு தேவைப்படும் என்றும் அதை அவர் உணரும் காலம் வரும் என்றும் கிரிக்கெட் விமர்சர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், 'தல' தோனியின் நீக்கம் குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியபோது, 'தலைவன் தோனி இல்லாமல் ஒரு டி-20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கேட்டு இதயமே நொறுங்கி போனது. மிக மோசமான செலக்சன் கமிட்டியின் முடிவு இது. ஆண்டவன் தான் உங்களை காப்பாத்தணும் பிசிசிஐ! தலைவன் தோனி இல்லாமல் ஆணியை கூட பிடுங்க முடியாது. நினைவில் வைத்து கொள்ளுங்கள்' என்று கூறியுள்ளார்.

More News

மீடு குறித்து அனிருத் கூறிய கருத்து

பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது தொடங்கி வைத்த மீடூ விவகாரம் தற்போது கோலிவுட் திரையுலகையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்கார்' படத்தில் விஜய்யுடன் நடித்த 100 ரசிகர் மன்ற நிர்வாகிகள்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் கதை குறித்து ஒருபக்கம் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரவி வந்தாலும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் எதிர்பார்ப்பு சிறிதளவும் குறையாமல் படத்தை வரவேற்க விஜய் ரசிகர்கள்

17 படங்கள், 17 இயக்குனர்கள்: வித்தியாசமான சாதனை செய்த கார்த்தி

நடிகர் கார்த்தி இதுவரை 16 படங்களில் நாடித்து முடித்துள்ளார். தற்போது அவரது 17வது படமான 'தேவ்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.

'சர்கார்' மற்றும் 'திமிறு பிடிச்சவன்' படங்களின் ஒற்றுமைகள்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது என்பதும் இந்த படத்திற்கு சென்சாரில் 'யூஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது என்பதும் தெரிந்ததே.

முதல்வரை கருணாஸ் தாக்கி பேசிய வழக்கு: நீதிமன்றம் புதிய உத்தரவு

தமிழக முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை தவறாக பேசியதாக காமெடி நடிகரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் மீது தொடர்ந்த வழக்கில்