close
Choose your channels

'தளபதி 67' திரைப்படம் ஹாலிவுட் ரீமேக்கா? சம்பவம் செய்ய காத்திருக்கும் லோகேஷ்!

Friday, October 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 66வது திரைப்படமான ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைய இருக்கும் நிலையில் ’தளபதி 67’ படத்தின் தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருவதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், கவுதம் மேனன் உள்பட 6 வில்லன்கள் நடிக்கவிருப்பதாகவும், த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படம் குறித்து வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில் தற்போது வந்த தகவலின் படி ’ஏ ஹிஸ்ட்ரி ஆஃப் வயலன்ஸ்’ என்ற சூப்பர்ஹிட் ஹாலிவுட் படத்தின் ரீமேக் உரிமையை லோகேஷ் கனகராஜ் வாங்கி வைத்திருப்பதாகவும் இந்த படத்தின் ரீமேக்தான் ’தளபதி 67’ என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜை ரசிகர்கள் லோகேஷ் சினிமா யுனிவர்ஸ்’ என புகழாரம் சூட்டி வரும் நிலையில் ’தளபதி 67’ படம் ஹாலிவுட் படத்தின் ரீ-மேக் இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் என்றும் இந்த படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos