close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழக கிரிக்கெட் வீரர்: யார் இவர்?

Friday, October 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நாளை மறுநாள் முதல் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் கிட்டத்தட்ட தெரிய வந்துள்ளனர்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் திவ்யதர்ஷினி, ரோஷினி, தர்ஷ குப்தா, ராஜலட்சுமி, மைனா நந்தினி, மணிகண்டன், அமுதவாணன், ஜிபி முத்து, மனிஷா யாதவ், ஷில்பா மஞ்சுநாத், ஸ்ரீப்ரியா, மன்சூரலிகான், கிறிஸ்டோபர் கனகராஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தமிழக கிரிக்கெட் வீரர் ஒருவர் கலந்துகொள்ள இருப்பதாக தெரிகிறது. தமிழக கிரிக்கெட் அணியில் விளையாடி உள்ள ராம் ராமசாமி என்பவர் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பிரபல மாடலான இவர் சென்னையை சேர்ந்தவர் என்பதும் ஒரு சில டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டாப் மாடல் இந்தியா சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக இவர் கலந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முதலாக ஒரு கிரிக்கெட் வீரர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.