close
Choose your channels

விஜய்க்கு போட்டி அஜித் இல்லை, விஷால் தான்.. அதிரடியாக ரிலீஸ் ஆகும் 2 படங்கள்..!

Saturday, April 20, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் மற்றும் விஜய் தனிப்பட்ட முறையில் நண்பர்களாக இருந்தாலும் தொழில் முறையில் இருவரும் தான் போட்டியாளர்களாக உள்ளனர் என்பதும் இரு தரப்பு ரசிகர்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் மோதிக் கொள்ளும் காட்சியையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் திடீரென விஜய்க்கு அஜித் போட்டி இல்லை, விஷால் தான் போட்டி என்று இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ’கில்லி’ படம் இன்று ரீ ரிலீஸ் ஆனதை அடுத்து விஜய் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று விஷால் நடித்த சூப்பர் ஹிட் படமான ’இரும்புத்திரை’ படமும் ரிலீஸாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஷால், சமந்தா, அர்ஜுன் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான ’இரும்புத்திரை’ திரைப்படம் 2018ஆம் ஆண்டு வெளியாகி அப்போதே ரூ.70 கோடிக்கு அதிகமாக வசூலாகி சூப்பர் ஹிட் ஆன படம் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் ’கில்லி’ ரிலீஸாகும் தினத்தில் அஜித்தின் ‘மங்காத்தா’ ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் ‘மங்காத்தா’ திரைப்படம் அவரது பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் ’கில்லி’ படத்திற்கு போட்டியாக ’இரும்புத்திரை’ படத்தை ரிலீஸ் செய்தது விஜய்க்கு போட்டி நான் தான் என்பதை விஷால் மறைமுகமாக கூறியிருக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.