யோகிபாபு கெட்டப்பை ரசித்த விஜய்: வரலட்சுமி வெளியிட்ட வீடியோ

  • IndiaGlitz, [Monday,July 16 2018]

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போதைய படப்பிடிப்பில் விஜய்யுடன் வரலட்சுமி இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'சர்கார்' படப்பிடிப்பின்போது விஜய் காதில் கடுக்கண் மற்றும் கையில் குடையுடன் ஸ்டைலாக நின்று கொண்டிருந்த புகைப்படம் ஒன்றை வரலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். இந்த புகைப்படம் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சற்றுமுன் நடிகை வரலட்சுமி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் யோகிபாபு வித்தியாசமான கெட்டப்பில் உட்கார்ந்திருக்க அவருடைய கெட்டப்பை ரசித்த விஜய், அவருடைய கன்னத்தை கிள்ளுவது போன்று உள்ளது. மேலும் யோகிபாபுவின் கன்னத்தை கிள்ளுவது யார்? என்ற கேள்வியை வரலட்சுமி எழுப்பியிருந்தாலும் அது விஜய்தான் என்பதை கண்டுபிடிக்க ரசிகர்கள் தவறவில்லை. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

More News

இந்தியா-இங்கிலாந்து போட்டியில் ஒரு காதல் புரபோசல்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நடந்தது. இந்திய அணி தோல்வி அடைந்தாலும், 10 ஆயிரம் ரன் அடித்த வீரர்களின் பட்டியலில் தோனி இணைந்தார்.

ஸ்ரீரெட்டி விவகாரம் குறித்து ஆர்.கே.செல்வமணி கருத்து

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீதும், தமிழ்லீக்ஸ் என்ற பெயரில் கோலிவுட் திரையுலக பிரபலங்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார்.

ஸ்ரீரெட்டியின் தமிழ்லீக்ஸ் பட்டியலில் இளம் தமிழ் ஹீரோ

ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தெலுங்கு திரையுலகினர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கிய ஸ்ரீரெட்டி தமிழ்லீக்ஸ் என்ற பெயரில் கோலிவுட் பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை கூறி வருகிறார்.

ஸ்ரீரெட்டியின் பாலியல் புகாரில் சிக்கிய பிரபல இயக்குனர்

ஸ்ரீரெட்டி தன்னை வாய்ப்புக்காக பயன்படுத்தியதாக பல திரையுலக பிரமுகர்கள் மீது கடந்த சில மாதங்களாக குற்றஞ்சாட்டி வருகிறார். கடந்த சில நாட்களாக அவரது பார்வை தமிழ்த்திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளது.

த்ரிஷாவின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் கடந்த 2002ஆம் ஆண்டில் இருந்து சுமார் 15 வருடங்களுக்கும் மேல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் நாயகியாக நடித்து வருபவர் த்ரிஷா