close
Choose your channels

தளபதி விஜய்யின் வித்தியாசமான புகைப்படத்தை வெளியிட்ட நெருங்கிய நண்பர்

Wednesday, May 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த லாக்டவுன் நேரத்தில் கோலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் பலர் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த புகைப்படக்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களால் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நடிகர் சஞ்சீவ் தனது சமூக வலைப்பக்கத்தில் தன்னுடைய வித்தியாசமான புகைப்படங்களை வெளியிடுவதற்கு பதிலாக தளபதி விஜய்யின் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிநாட்டுக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தபோது விஜய்யும் அவருடைய நண்பர்களும் வித்தியாசமான உடை மற்றும் மேக்கப்பில் இருந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தளபதி விஜய் குறித்த பல புகைப்படங்களை சஞ்சீவ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பதும், அதில் சமீபத்தில் விஜய் கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது எடுத்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகர் சஞ்சீவ் நடித்துள்ளார் என்பதும் நீண்ட இடைவெளிக்கு பின் அவர் தளபதியுடன் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment