close
Choose your channels

புதிய கல்விக் கொள்கை: விஜய் தரப்பில் இருந்து சூர்யாவுக்கு கிடைத்த ஆதரவு

Sunday, July 21, 2019 • தமிழ் Comments

நடிகர் சூர்யா சமீபத்தில் தெரிவித்த புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கமல்ஹாசன், சீமான், தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்த தனது நிலையையும் அது குறித்த சந்தேகங்களையும் மக்கள் விழிப்புணர்ச்சி பெற வேண்டியும் ஒரு நீண்ட அறிக்கையை சூர்யா நேற்று வெளியிட்டு வெளியிட்டார்.

இதனை அடுத்து தற்போது விஜய் தரப்பில் இருந்து சூர்யாவுக்கு ஆதரவு கிடைத்துள்ளது. விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று இயக்குனர் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது 'சுதந்திர நாட்டில் நல்ல கருத்துக்களை பேச அனுமதி இல்லை. இது எல்லோருக்கும் நடந்துள்ளது. அதுபோலவே சூர்யாவுக்கும் நடந்துள்ளது. இருந்தாலும் நல்ல கருத்துக்களை அவர் தொடர்ந்து பேச வேண்டும்.  சூர்யா கூறியதைப் போன்றே நல்ல கருத்துக்களை தொடர்ந்து எல்லோரும் பேச வேண்டும்' என்று விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

நடிகர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு அதிகரித்து கொண்டே வந்து கொண்டிருக்கும் நிலையில் விஜய்யின் தந்தையும் ஆதரவு அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz