close
Choose your channels

1400 பேருக்கு விருது.. 12 மணி நேரம் அசராது நின்ற விஜய்.. 'ரஞ்சிதமே' ஸ்டைலில் பினிஷிங்..!

Sunday, June 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற கல்வி விழாவில் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பைச் சேர்ந்த 1400 மாணவர்களுக்கு விஜய் தன் கையாலே விருதுகளை வழங்கினார் என்பதும் பொன்னாடை போர்த்தினார் என்பதையும் பார்த்தோம்.

காலையில் ஆரம்பித்த இந்த விழா இரவு வரை நீடித்தது என்பதும் கிட்டத்தட்ட 12 மணி நேரம் விஜய் அசராமல் இந்த விழாவில் முழுமையாக கலந்து கொண்டு அனைத்து மாணவ மாணவிகளுக்கும் அவர் தனது கையால் விருதுகளையும் சான்றிதழையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை தமிழகத்தில் எந்த ஒரு அரசியல்வாதியும் நடிகரும் இதுபோன்ற மாணவ மாணவிகளுக்காக தொடர்ச்சியாக 12 மணி நேரம் செலவழித்தது இல்லை என்று கூறப்படுகிறது.

தமிழகத்திற்கு ஒரு சிறந்த தலைவர் கிடைத்துவிட்டார் என்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல மாணவ மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை மாணவர்களிடம் தொடங்க வேண்டும் என்பது மிகவும் புத்திசாலித்தனமான நகர்வு என்றும் கண்டிப்பாக அவர் மற்ற நடிகர்களை போல் அல்லாமல் அரசியலில் சாதிப்பார் என்றும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் நேற்றைய விழாவில் விஜய்யின் ஒட்டுமொத்த மனித நேயம் தெரிந்தது என்பது மட்டுமின்றி விஜய் மீது மாணவ மாணவிகள் எந்த அளவுக்கு அன்பும் பாசமும் வைத்துள்ளார்கள் என்பதும் தெரிய வந்தது. தமிழகத்திற்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் விஜய்யால் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.