close
Choose your channels

'வாரிசு' படத்துடன் மோதிய பிரபல நடிகரின் படம்.. மீண்டும் 'லியோ'வுடன் மோதல்..!

Saturday, July 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ படத்தின் ரிலீஸ் போது பிரபல நடிகரின் படம் ரிலீஸ் ஆன நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் ’லியோ’ படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் அதே நடிகரின் படம் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் உருவான ’வாரிசு’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியானது. இந்த நிலையில் ஜனவரி 12ஆம் தேதி என்டிஆர் பாலகிருஷ்ணா நடித்த ’வீரசிம்ஹா ரெட்டி’ என்ற திரைப்படம் வெளியானது என்பதும் இதனால் தெலுங்கு மாநிலங்களில் ’வாரிசு’ படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் என்டிஆர் பாலகிருஷ்ணா நடிக்கும் படம் அதே தேதியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

என்டிஆர் பாலகிருஷ்ணா தற்போது ’பகவந்த் கேசரி’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி தசரா விடுமுறையின் போது வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் விஜய் மற்றும் என்டிஆர் பாலகிருஷ்ணா படங்கள் மோத உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.