செல்பிக்கு போட்டியாக பிரியாணி, பில்லியர்ட்ஸ்.. மாறி மாறி டிரெண்ட் ஆகும் அஜித், விஜய்..!

  • IndiaGlitz, [Thursday,March 21 2024]

அஜித், விஜய் ஆகிய இரண்டு நடிகர்களும் தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்கள் என்பதும் இருவரும் கடந்த பல ஆண்டுகளாக தனிப்பட்ட முறையில் நண்பர்களாக இருந்தாலும் தொழில் அளவில் போட்டியாளர்களாக கருதப்படுகிறார்கள் என்பதும் தெரிந்தது.

குறிப்பாக அஜித், விஜய் படங்கள் ரிலீசாகும்போது ஒரு திருவிழா போன்று இருந்தாலும் ஒருவர் படம் ரிலீஸ் ஆகும்போது இன்னொருவரின் ரசிகர்கள் கேலியும், கிண்டலும் செய்து வருவது தொடர்கதை ஆகி வருகிறது. அதேபோல் ஒரு நடிகரின் திரைப்படத்தின் அப்டேட் வந்தால் இன்னொரு நடிகரின் புகைப்படம் அதே நாளில் வெளிவந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக விஜய் திருவனந்தபுரத்தில் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் ரசிகர்களுடன் அவர் எடுக்கும் செல்பி புகைப்படங்கள் மற்றும் சில வீடியோக்கள் டிரெண்டாகி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த ட்ரெண்டுக்கு எதிராக திடீரென அஜித் பைக் டூர் சென்ற புகைப்படம், அவர் தனது டீமில் உள்ளவர்களுக்கு பிரியாணி செய்து கொடுத்த புகைப்படம் மற்றும் பில்லியர்ட்ஸ் விளையாடிய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

அதுமட்டுமின்றி சமீபத்தில் அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’குட் பேட் அக்லி’ படத்தின் செய்திகளும் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் திருவனந்தபுரம் செல்ஃபி டிரெண்ட் ஆகி வரும் நிலையில் இன்னொரு பக்கம் அஜித்தின் பிரியாணி ட்ரெண்டாகி வருவதால் சமூக வலைதளத்தில் அஜித், விஜய் ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

திடீரென இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை டெலிட் செய்த சன் டிவி சீரியல் நடிகை.. என்ன காரணம்?

சன் டிவி சீரியல் நடிகை திடீரென இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை டெலிட் செய்து விட்டு சமூக வலைதளங்களில் இருந்து விலகி விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

'நடுவுல கொஞ்சம் இசைய காணோம்'.. 'சச்சின்' பட இயக்குனரின் ஒரு இசைத்தொடர்..!

லைக்கா மியூசிக் நிறுவனம், 'நடுவுல கொஞ்சம் இசைய காணோம்' என்கிற தலைப்பில், 'சச்சின்' பட இயக்குனர் ஜான் மகேந்திரன் வழங்க ஒரு இசை தொடரை வெளியிட்டு இருக்கிறது.

இளையராஜா பயோபிக் திரைப்படத்தில் கமல்ஹாசன்.. அவரே அறிவித்த அதிகாரபூர்வ தகவல்..!

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'இளையராஜா' என்ற படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது என்பதும் இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்கும் இந்த படத்தை 'கேப்டன் மில்லர்'

மகனுடன் சென்று இளைஞரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய தமிழ் நடிகை.. போலீசில் புகார்

தமிழ் நடிகை ஒருவர் தனது மகனுடன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது நடுரோட்டில் இளைஞர் ஒருவரை தாக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த நடிகை மற்றும் அவரது மகன் மீது

மேஸ்ட்ரோவின் மந்திரத்திற்கு சரணடைகிறேன்! ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு பிரபல இயக்குனர் வாழ்த்து..!

இசைப்புயல் ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த பாடல் ஒன்று வெளியாகி இருக்கும் நிலையில் இந்த பாடலை கேட்ட பிரபல இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் 'என்ன ஒரு பாடல்,