விஜய்யின்  'தளபதி 66' ரிலீஸ் தேதி அறிவிப்பு: உற்சாகத்தில் ரசிகர்கள்

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர்.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் ’தளபதி 66’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம் உள்ளிட்டோர் இணைந்து உள்ள தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் நடிகர் பிரபு இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் ’தளபதி 66’ திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர் .

ஏற்கனவே தளபதி விஜய் நடித்த, திருப்பாச்சி, நண்பன், போக்கிரி, மாஸ்டர் உட்பட பல திரைப்படங்கள் பொங்கல் தினத்தில் தான் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் ’தளபதி 66’ திரைப்படமும் அதேபோல் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'தளபதி 66' படத்தில் இணைந்த பிரபல நடிகர்: நாயகி ராஷ்மிகா அப்பா கேரக்டரா?

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 66' திரைப்படத்தில் ஏற்கனவே சரத்குமார், ஷாம், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிக்க இருப்பது உறுதி செய்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகர்

அவர்களை இங்கிருந்து விரட்டியடிக்க ஒரே வழி இதுதான்: இயக்குனர் தங்கர்பச்சான் ஆவேசம்!

 ஹிந்தி மொழியை தமிழகத்தில் திணிப்பவர்களை விரட்டியடிக்க ஒரே வழி இதுதான் என இயக்குனர் தங்கர்பச்சான் தனது சமூக வலைத்தளத்தில் ஆவேசமாக பதிவு செய்துள்ளார் 

சரியாக ரீமேக் செய்யப்பட்ட படம் 'மெர்சல்' தான்: அட்லியை கலாய்த்த பிரபல இயக்குனர்

சரியாக ரீமேக் செய்யப்பட்ட தமிழ் படம் எது என்ற ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த பிரபல இயக்குனர் அட்லீயின் 'மெர்சல்' என்று பதில் அளித்து இருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை

'குக் வித் கோமாளி' சீசன் 3 பிரபலத்தின் வளைகாப்பு புகைப்படம்: இணையத்தில் வைரல்!

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவரின் வளைகாப்பு புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் சேர்ந்து முத்தம் கொடுத்தது யாருக்கு தெரியுமா? வைரல் வீடியோ!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலர்கள் என்பதால் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக் கொள்வது சகஜம் தான்.