விஜய்யிடம் பாராட்டு பெற்ற எதிர்நீச்சல் நடிகை

  • IndiaGlitz, [Thursday,July 02 2015]

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' திரைப்படம் செப்.17ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சிறிய வேடமாக இருந்தாலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகை நந்திதா ஸ்வேதா, தன்னுடைய கேரக்டர் குறித்து சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

விஜய்யுடன் நடிக்கவேண்டும் என்பது என்னுடைய கனவுகளில் ஒன்று. ஆனால் இவ்வளவு சீக்கிரம் என்னுடைய கனவு நிறைவேறும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. முதன்முதலில் அவருக்கு ஜோடியாக ஒரு சிறு பகுதியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தேன். ஆனால் விஜய் மிகவும் இனிமையான மனிதர். அவர் என்னுடைய பதட்டத்தை போக்கி, எனக்கு ஊக்கமளித்தார்.

நான் நடித்த எதிர்நீச்சல் படத்தை அவர் பார்த்ததாகவும், அதில் என்னுடைய நடிப்பு நன்றாக இருந்ததாகவும் என்னை பாராட்டினார். இந்த படத்தின் ரிலீஸை மற்றவர்களை விட நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி போன்ற வெற்றி படங்களில் நடித்த நந்திதவுக்கு இந்த படமும் கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் நந்திதா, கடந்த வாரம் இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த இரண்டு படங்களுமே, திகில் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிம்புவின் இது நம்ம ஆளு' ரிலீஸ் தேதி?

சுமார் மூன்று வருட காலம் சிம்பு நடித்த திரைப்படம் எதுவும் ரிலீஸாக நிலையில், சிம்பு, ஹன்சிகா நடித்த 'வாலு' திரைப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக...

'வேலையில்லா பட்டதாரி'களுக்கு சமந்தா கொடுத்த ரூ.5000/-

ஒரு படம் வெற்றிகரமாக படப்பிடிப்பை நடத்தி முடித்த பின்னர் கடைசி நாள் படப்பிடிப்பில் ஒவ்வொரு ஹீரோவும் ஒவ்வொரு விதத்தில் அந்த படத்தில் பணிபுரிந்த டெக்னீஷியன்கள் உள்பட அனைவருக்கும் ஏதாவது பரிசுப்பொருட்களை கொடுப்பது வழக்கம்....

விஷால்-பாண்டிராஜ் படத்தில் 'மெட்ராஸ்' நாயகி

சுசீந்திரன் இயக்கத்தில் 'பாயும் புலி' படத்தில் நடித்து வரும் விஷால், அந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தற்போது உள்ளார்...

சூப்பர் ஸ்டார் இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்த கொம்பன்

நடிகர் கார்த்திக்கு கோலிவுட்டில் திருப்புமுனையை கொடுத்த படம் என்றால் அது 'மெட்ராஸ்' என்றுதான் சொல்ல வேண்டும்....

விஜய்சேதுபதியின் 'ஆரஞ்சு மிட்டாய்' சென்சார் விபரங்கள்

வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முக்கியமானவராக விளங்கும் விஜய் சேதுபதி முதல்முதலாக தயாரித்து நடித்த திரைப்படம் ஆரஞ்சுமிட்டாய்...