close
Choose your channels

உதவி கேட்டு வந்த முதிய தம்பதிகள்.. அடுத்த விநாடியே உதவி செய்த புஸ்ஸி ஆனந்த்..!

Saturday, August 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் கூட்டம் இன்று நடத்தப்பட்ட நிலையில் இந்த கூட்டம் முடிந்த பிறகு நிர்வாகிகளுக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்போது உதவி கேட்டு வந்த முதிய தம்பதிகளுக்கு உடனடியாக அடுத்த வினாடியே விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் உதவி செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் கூட்டம் சென்னை அருகே பனையூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், ‘விஜய் மக்கள் இயக்கம் அடுத்து வேறொரு பரிமாணம் எடுத்துள்ளது என்றும் தமிழ்நாடு அளவில் பலம் வாய்ந்த இயக்கமாக விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் விஜய் மக்கள் நிர்வாகிகள் தங்கள் சமூக வலைதள கணக்கில் தரம் தாழ்ந்து ஆபாசமாக பதிவிட கூடாது என்றும், சமூக வலைதளத்தில் தரும் பதில்களை கருத்தியலாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் விஜய் மக்கள் இயக்க தலைமை வெளியிடும் பதிவின் லைவ் மற்றும் ஷேர் எண்ணிக்கையை மில்லியன் கணக்கில் தாண்ட செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் கூட்டம் முடிவடைந்ததும் விஜய் மக்கள் நிர்வாகிகளுக்கு உணவு பரிமாறப்பட்டது. நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் தனது கையால் உணவு பரிமாறினார். அப்போது ஒரு வயதான முதிய தம்பதிகள் உதவி கேட்டு புஸ்ஸி ஆனந்த் இடம் வந்தனர்.

அவர்களை அன்பாக விசாரித்த புஸ்ஸி ஆனந்த் அவர்களுக்கு பணம் கொடுத்தது மட்டும் இன்றி தளபதி அவர்கள் ஊரில் வந்தவுடன் அவரிடம் சொல்லி ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு அரிசி பருப்பு மற்றும் தேவையான பொருட்களை கொடுக்க உதவி செய்கிறேன் என்றும் மாவட்ட தலைவரிடம் உங்கள் முகவரியை கொடுத்து செல்லுங்கள் என்றும் கூறினார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment