விஜய்யின் 'புலி' ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Friday,September 25 2015]

இளையதளபதி விஜய் நடித்த ஒவ்வொரு திரைப்படமும் வெளிவரும்போது அவரது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் 'புலி' படத்திகு விஜய் ரசிகர்களிடம் இருந்து மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களிடம் இருந்தும் குறிப்பாக குழந்தைகளிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வண்ணம் வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி உலகம் முழுவதும் 'புலி' பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சென்சாருக்கு சென்று 'யூ' சர்டிபிகேட் பெற்ற 'புலி' திரைப்படம் 154 நிமிடங்கள் ஓடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது 'புலி'யின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 34 நிமிடங்கள் ஆகும்.

இந்நிலையில் 'புலி' திரைப்படத்தின் முன்பதிவு இன்று காலை முதல் பெருவாரியான தியேட்டர்களில் தொடங்கப்பட்டு ஒருசில நிமிடங்களில் டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்பனையாகியுள்ளது. இன்னும் ஒருசில தியேட்டர்களில் நாளை முன்பதிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அனிருத்தின் தரலோக்கலுக்கு அபார டான்ஸ் ஆடிய 'தல'?

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் திரைப்படத்திற்கு 'வேதாளம்' என்ற டைட்டில் உறுதி செய்யப்பட்ட தகவலை ஏற்கனவே பார்த்தோம்...

திரை விமர்சனம் : உனக்கென்ன வேணும் சொல்லு - தரமான திகில் படம்

தமிழ் சினிமாவைப் பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு திகில் (பேய்ப்) படங்கள் மற்றும் திகில் நகைச்சுவைப் படங்களின் எண்ணிக்கை...

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேடத்தில் 'வேதாளம்' அஜீத்?

அஜீத் நடித்து வரும் வேதாளம் படத்தில் இதுவரை அவர் ஒரு டாக்சி டிரைவர் கேரக்டரில்தான் நடிக்கின்றார் என்ற செய்தி வெளிவந்து...

வேதாளம் தலைப்பு ஏன்? புதிய தகவல்கள்

அஜீத் படத்தின் தலைப்புக்காக காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு நேற்று ஒருவழியாக 'வேதாளம்' என்ற தலைப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்...

ரஜினியின் திருமண மண்டபத்தில் பாண்டவர் அணி ஆலோசனை

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதியான...