close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேடத்தில் 'வேதாளம்' அஜீத்?

Thursday, September 24, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜீத் நடித்து வரும் வேதாளம் படத்தில் இதுவரை அவர் ஒரு டாக்சி டிரைவர் கேரக்டரில்தான் நடிக்கின்றார் என்ற செய்தி வெளிவந்து கொண்டிருந்த நிலையில், தற்போது வந்த தகவலின்படி அவர் இந்த படத்தில் லோக்கல் 'டான்' ஆக நடித்திருப்பதாகவும், கிளைமாக்ஸுக்கு முந்தைய பிளாஷ்பேக்கில் இந்த ரகசியம் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

நேற்று வெளியான ஃபர்ஸ்ட் லுக்கும் அஜீத்தின் 'டான்' கெட்டப்பை குறிப்பதாகவே கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி 'கபாலி' படத்தில் 'டான்' ஆக நடித்து வரும் நிலையில், அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை நெருங்கி வரும் அஜீத்தும் 'டான்' ஆக நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், சூரி, கபீர்சிங், ராகுல்தேவ், தம்பிராமையா மற்றும் பலர் நடித்து வரும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 'வீரம்' சிவா இயக்கி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படம் தல' ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.