close
Choose your channels

அனிருத்தின் தரலோக்கலுக்கு அபார டான்ஸ் ஆடிய 'தல'?

Friday, September 25, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் திரைப்படத்திற்கு 'வேதாளம்' என்ற டைட்டில் உறுதி செய்யப்பட்ட தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் டைட்டிலும், பர்ஸ்ட் லுக்கும் சமூக இணையதளங்களை ஆக்கிரமித்து வரும் நிலையில் அஜீத் ரசிகர்கள் எழுந்து ஆடவைக்கும் படியான ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கோலிவுட் திரையுலகில் உள்ள இசையமைப்பாளர்களில் ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும் என்பது தெரிந்ததே. இந்த வகையில் அனிருத்துக்கு உள்ள சிறப்பு அவர் ஒரு 'தரலோக்கல்' ஸ்பெஷலிஸ்ட் என்பது. சமீபத்தில் வெளியான தனுஷின் 'மாரி' படத்தில் அவர் போட்ட தரலோக்கல் பாடலுக்கு தியேட்டரே அதிர்ந்தது என்பது அந்த படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்

அதே அனிருத் தற்போது 'வேதாளம்' படத்திற்கும் ஒரு தரலோக்கல் பாடல் ஒன்றை கம்போஸ் செய்துள்ளராம். இந்த தரலோக்கல் பாடலுக்கு அஜீத் செம டான்ஸ் ஆடியுள்ளதாக இந்த பாடலுக்கு நடனப்பயிற்சி அமைத்த ஷோபி மாஸ்டர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 'என்னை அறிந்தால்' படத்தில் ஏற்கனவே 'அதாரு அதாரு உதாரு உதாரு' பாடலுக்கு பட்டையை கிளப்பிய அஜீத், இந்த படத்தின் தரலோக்கல் பாடலிலும் நிச்சயம் தூள் கிளப்பியிருப்பார் என்பதை நம்பலாம். ஆனால் இந்த பாடலை திரையில் காண, தீபாவளி வரை பொறுத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.