close
Choose your channels

விஜய்சேதுபதியை தாக்கிய மர்மநபர்: வைரல் வீடியோவால் பரபரப்பு!

Wednesday, November 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய் சேதுபதியை மர்ம நபர் ஒருவரை பின்னால் வந்து தாக்கிய சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் பெரும்பாலான படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி தனது பாதுகாவலர்களுடன் விமான நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென பின்னால் இருந்து பின்னால் இருந்து வந்த மர்ம நபர் ஒருவர் விஜய் சேதுபதியை தாக்கியுள்ளார். உடனடியாக விஜய் சேதுபதி பாதுகாவலர்கள் அந்த நபரை மடக்கி பிடிப்பது போன்ற காட்சிகள் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் சேதுபதி தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ’விக்ரம்’ வெற்றிமாறன் இயக்கி வரும் ’விடுதலை’ விக்னேஷ் சிவன் இயக்கிவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.