விஜய்சேதுபதியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,February 10 2020]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய படங்களிலும் நடித்து தென்னிந்திய நடிகர் ஆகிவிட்டார் என்பது ஏற்கனவே தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வரும் தெலுங்கு திரைப்படம் ஒன்றின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் குறிப்பிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

புச்சிபாபு சானா என்பவர் இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ், க்ரித்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘உபென்னா’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீஸ் தேதி ஏப்ரல் 2 என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரை விஜய்சேதுபதி தனது சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

விஜய்சேதுபதிக்கு இந்த ஆண்டு இன்னும் திரைப்படம் எதுவும் வெளியாகாத நிலையில் இந்தப் படம்தான் அவரது நடிப்பில் வெளியாகும் இந்த ஆண்டின் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது

More News

சீனா-கொரோனா வைரஸ்.. உண்மை நிலவரத்தை ஆவணப்படுத்த முயன்ற பத்திரிக்கையாளர் மாயம்..!

பத்திரிகையாளர்கள் மொபைல் வழியாகச் சேகரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், சென் கியுஷி மர்மமான முறையில் மாயமாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குகிறாரா கேஎஸ் ரவிக்குமார்? அவரே அளித்த விளக்கம்

தல அஜித் தற்போது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விரைவில் வெளியாகவுள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் விழிப்புணர்ச்சி பாடல்!

திரையுலகில் பிஸியாக இருக்கும் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்கள் அவ்வப்போது தனி பாடல்களையும் கம்போஸ் செய்து வெளியிடுவார்

மக்களவை வரை சென்ற ரஜினி-விஜய் விவகாரம்

கடந்த சில நாட்களாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் கொண்டிருப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று ரஜினி மீது வருமான வரி தொடுத்த வழக்கு வாபஸ் பெற்றது

உத்திரப்பிரதேசத்துக்கு ரூ.7,000 கோடி.. தமிழ்நாட்டுக்கு வெறும் பத்தாயிரம் ரூபாய்..! மத்திய பட்ஜெட்.

தமிழக இரயில்வே திட்டங்களுக்கு வெறும் 10,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது தமிழகத்திற்கு மத்திய அரசு செய்கிற துரோகம் என சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.