close
Choose your channels

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Saturday, December 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகன், வில்லன், சிறப்பு தோற்றம் என பல்வேறு தோற்றங்களில் நடித்து வருகிறார் என்பதும்,அதேபோல் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி என பான் இந்திய நடிகராக மாறிவிட்டார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ’டிஎஸ்பி’ திரைப்படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.

இந்த நிலையில் ’டிஎஸ்பி’ திரைப்படம் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் டிசம்பர் 30-ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. அதிரடி காவல்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி இந்த படத்தில் நடித்து இருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக அனுகீர்த்தி வாஸ் நடித்து இருந்தார் என்பதும் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி சுமார் 30 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஷாருக்கானுடன் ’ஜவான், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ’விடுதலை’ மற்றும் ’மெரி கிறிஸ்துமஸ்’ ’மும்பைகார்’ உள்பட பல படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கமல்ஹாசனுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.