விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

  • IndiaGlitz, [Saturday,October 29 2022]

தமிழ் சினிமாவின் பிசியான நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது.

ஹீரோ, வில்லன், சிறப்பு தோற்றம் என அனைத்து விதமான கேரக்டர்களிலும் அசத்தி வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்பது தெரிந்ததே. அதேபோல் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் பாலிவுட்டிலும் அவர் படங்களை நடித்து வருகிறார்.

சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ ’விக்ரம்’ ’மாமனிதன்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தற்போது அவர் வெற்றிமாறனின் ’விடுதலை’ அட்லியின் ‘ஜவான்’ உள்பட 6 படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’மெர்ரி கிறிஸ்மஸ்’. பிரபல பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி, காத்ரினா கைஃப் உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் பாலிவுட் திரையுலகில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ’மெர்ரி கிறிஸ்மஸ்’ திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

'வியூகம்', 'சபதம்': இரண்டு பாகங்களின் டைட்டிலை அறிவித்த பிரபல இயக்குனர்!

பிரபல இயக்குனர் தனது அடுத்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட இருப்பதாகவும் அந்த படங்களின் டைட்டில் 'வியூகம்' மற்றும் 'சபதம்' என தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

நான் வீட்டை விட்டு ஓடிப்போகப்போறேன், எல்லாரும் வழியனுப்பி விடுங்க.. 'நித்தம் ஒரு வானம்' டிரைலர்

நடிகர் அசோக்செல்வன் நடித்த 'நித்தம் ஒரு வானம்' என்ற படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

16 வயது சிறுமி பாலியல் வழக்கில் பாய்ந்த போக்சோ சட்டம்: ஷங்கர் மருமகன் எடுத்த அதிரடி முடிவு!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மருமகன் மீது 16 வயது சிறுமி கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு காரணமாக அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்ததால் அவர் தற்போது அதிரடி முடிவு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். 

'இதை சொன்ன புறம்போக்கு மட்டும் என் கையில கிடைச்சான்.... 'நான் மிருகமாய் மாற' டிரைலர்

சசிகுமார் நடித்த 'நான் மிருகமாய் மாற' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த மாதம் அதாவது நவம்பர் மாதம்

ரூ.100 கோடி படமா இருந்தாலும் நல்லா இல்லைன்னா, நல்லா இல்லைன்னு சொல்லுங்க: கமல்ஹாசன்

ஒரு திரைப்படம் 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு இருந்தாலும் அந்த படம் நன்றாக இல்லை என்றால் நன்றாக இல்லை என்று தைரியமாக விமர்சனம் செய்யுங்கள் என்று உலக நாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.