விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,March 21 2022]

தமிழ் திரையுலகில் அதிக திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள திரைப் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன என்ற செய்தியை பார்த்து வருகிறோம்.  விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஏப்ரல் மாதத்திலும், கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி நடித்துள்ள ’விக்ரம்’ திரைப்படம் ஜூன் மாதத்தில் வெளியாக உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இடைப்பட்ட மே மாதத்தில் விஜய்சேதுபதி நடித்து முடித்துள்ள ’மாமனிதன்’ என்ற திரைப்படம் வெளியாக இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் மே 6ஆம் தேதி ’மாமனிதன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளார். மேலும் அவர் நடித்து தயாரித்த ’விசித்திரன்’ என்ற திரைப்படம் இரண்டு வார இடைவெளியில் அதாவது மே 20ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்.

ஏப்ரல், மே, ஜூன்  என அடுத்தடுத்த மாதங்களில் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் வெளியாக இருப்பதை அடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

More News

'படக்குழு கொண்டாடாத 'பீஸ்ட்' இசை வெளியீட்டு விழாவை கொண்டாடிய ரசிகர்கள்!

'பீஸ்ட்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை படக்குழுவினர் கொண்டாடவில்லை என்று முடிவெடுத்த நிலையில் ரசிகர்களே இசை வெளியீட்டு விழாவை கொண்டாடிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

10 ஆயிரம் சதுர அடி போஸ்டர் மூலம் அஜித் படத்தின் முக்கிய அறிவிப்பு!

அஜித் நடித்த 'வலிமை' படத்தின் முக்கிய அறிவிப்பை பத்தாயிரம் சதுர அடி போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

'ஆர்.ஆர்.ஆர்' வெற்றிக்காக புகழ் பெற்ற கோவிலுக்கு சென்ற எஸ்.எஸ்.ராஜமெளலி!

பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

ஹோலி கொண்டாடிய சிலமணி நேரத்தில் சீரியல் நடிகை பலி: அதிர்ச்சி தகவல்

ஹோலி பண்டிகை கொண்டாடிய சில மணி நேரத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் கார் விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

தளபதி என்னை ஒரு நாள் கூப்பிடுவார்: நம்பிக்கையுடன் காத்திருக்கும் பிரபல இயக்குனர்!

தளபதி விஜய் என்னை ஒருநாள் கூப்பிடுவார் என நம்பிக்கையோடு காத்திருப்பதாக பிரபல இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.