close
Choose your channels

நண்பர்களுடன் விஜய் மகனின் குரூப் போட்டோ: இணையதளங்களில் வைரல்

Thursday, July 2, 2020 • தமிழ் Comments

தளபதி விஜய் மகன் சஞ்சய் தற்போது கனடாவில் படித்துக் கொண்டிருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக அவரால் இந்தியாவுக்கு திரும்ப முடியாத சூழலில் இருந்ததாகவும், ஆனாலும் அவர் அங்குள்ள உறவினர் வீட்டில் பாதுகாப்புடன் இருந்ததாகவும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் உலகின் பல நாடுகளில் இருந்து தற்போது சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருவதால் விஜய் மகன் சஞ்சய் நாடு திரும்பியிருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக விஜய்யும் அவருடன் படித்த நண்பர்களும் இணைந்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் படிப்பை முடித்தவுடன் விஜய் மகன் ஜேசன் சஞ்சய், திரையுலகில் அறிமுகமாகவிருப்பதாகவும், அவர் நடிகராக அல்லது டெக்னீஷியனாக அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz