close
Choose your channels

'குட்டி ஸ்டோரியில் மகளிர் தின வாழ்த்து கூறிய விஜய்டிவி டிடி!

Monday, March 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி புகழ் டிடி என்கிற திவ்யதர்ஷினி இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான முறையில் குட்டி ஸ்டோரி பாடல் பின்னணியில் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

மார்ச் 8 ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டிடி தனது இன்ஸ்டாகிராமில் வித்தியாசமான முறையில் மகளிர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்

அவர் தனக்கு 36 வயது ஆகிறது என்றும், இருப்பினும் தான் சிங்கிள் என்றும், விவாகரத்து ஆனவர் என்றும், இதுவரை குழந்தை இல்லாதவர் என்றும் ஆனாலும் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் வித்தியாசமானது என்றும் உங்கள் வாழ்க்கையை நீங்கள் அனுபவித்து வாழுங்கள் என்றும், சமூகம் உங்களை தோல்வியானர் என்று தீர்மானப்பதை அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறி அனைவருக்கும் தனது மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.