close
Choose your channels

சொந்த வீடு கட்டிய விஜய் டிவி பிரபலம்.. திருமண மண்டபம் போல் பிரமாண்டமான வீடு..!

Friday, March 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி பிரபலம் ஒருவர் சொந்த வீடு கட்டி உள்ள நிலையில் இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நிகழ்ச்சியின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

விஜய் டிவியில் தங்களது திறமையை நிரூபிப்பவர்கள் அனைவருமே தற்போது நன்றாக செட்டில் ஆகிவிட்டனர் என்பதும் சொந்த வீடு கார் என வசதியாக வாழ்ந்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான தீனா தற்போது தனது சொந்த ஊரில் திருமண மண்டபம் போன்ற மிகப்பெரிய வீட்டை கட்டி கிரகப்பிரவேசம் நடத்தியுள்ளார்.

விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தீனா, தனுஷ் இயக்கிய ‘பா பாண்டி’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘கைதி’, ‘மாஸ்டர்’ மற்றும் ‘விக்ரம்’ படங்களில் நடித்த தீனா, இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தீனா தற்போது தனது சொந்த ஊரில் லட்சக்கணக்கில் செலவு செய்து புதிய வீட்டை கட்டி உள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ள புகைப்படங்களில் 25 ஆண்டுகளுக்கு முன்பு தான் இருந்த வீட்டையும் இப்போது எடுத்த வீட்டையும் பதிவு செய்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் கிரகப்பிரவேசத்தின்போது தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.