close
Choose your channels

பிரதீப்புக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறதா? விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு..!

Tuesday, November 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரது வெளியேற்றம் அநீதியானது என்றும், விஜய் டிவி மட்டுமன்றி கமல்ஹாசன் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

தனக்கு ஒரு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பிரதீப் சமூக வலைதளங்கள் மூலம் கேட்டுக் கொண்ட போதிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் பொய்யான குற்றச்சாட்டுகளால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப்புக்கு ஒரு சூப்பர் வாய்ப்பை வழங்கி விஜய் டிவி பிராயச்சித்தம் தேடிக் கொண்டதாக தெரிகிறது.

ஹாட் ஸ்டாருக்காக ஒரு வெப் தொடரை இயக்க பிரதீ இடம் விஜய் டிவி கதை கேட்டுள்ளதாகவும் விரைவில் தற்போது பிரதீப் அதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது தனக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்று கனவு இருப்பதாக பிரதீப் கூறிய நிலையில் அந்த கனவு தற்போது நிறைவேற போவதாக தெரிகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரெட்கார்ட் கொடுக்கப்பட்டதால் அவரது வாழ்க்கையை திசை மாறிப் போன நிலையில் தற்போது மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.