close
Choose your channels

ஸ்கூல் தான் வாழ்க்கையில் ஒரு கோல்டன் பீரியட்.. விஜய் டிவி ரக்சனின் 'மறக்குமா நெஞ்சம்' டிரைலர்..!

Sunday, November 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ரக்சன் ஹீரோவாக நடித்த ’மறக்குமா நெஞ்சம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இரண்டு நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த ட்ரைலரில் பள்ளி காலத்தில் உடன் படிக்கும் மாணவியை மனதில் காதலித்து, ஆனால் அந்த காதலை வெளியே சொல்ல தைரியம் இல்லாமல் இருந்தது, இதையடுத்து நீண்ட வருடங்கள் கழித்து மீண்டும் பள்ளியில் அனைவரும் ஒன்று சேரும்போது என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தை திரைக்கதை என டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

ரக்சன் பள்ளி மாணவராகவும் காதலை வெளிப்படுத்த முடியாத ஒரு இளைஞனாகவும் மிகவும் அருமையாக நடித்துள்ளார். ரக்சன், தீனா, மாலினா உள்பட பலர் நடித்துள்ளனர். சச்சின் வாரியர் இசையில் உருவாகிய இந்த படத்தை ராகுல் யோகேந்திரன் இயக்கியுள்ளார்

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் பார்வையாளர்களின் பள்ளி காலத்தை நினைவுபடுத்தும் வகையில் பின்னுக்கு கொண்டு செல்லுமா? இன்னொரு ‘96’ படம் போல் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment