கோவா, சீனாவில் 'விஜய் 59' படப்பிடிப்பு

  • IndiaGlitz, [Monday,August 10 2015]

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படம் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த படமான 'விஜய் 59' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.

'விஜய் 59' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கோவா மற்றும் சீனா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் தனது குரு ஷங்கரின் 'ஐ' திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டது என்பதால் அவரிடம் அட்லி கலந்தாலோசித்து, சீனாவின் முக்கிய லொகேஷன்களை கேட்டறிந்து சீனாவில் படமாக்கபட வேண்டிய லொகேஷன்களை சில நாட்களுக்கு முன்பே அவர் முடிவு செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், பிரபு, சமந்தா, எமிஜாக்சன், மகேந்திரன், ராதிகா, கே.எஸ்.ரவிகுமார், நான் கடவுள்' ராஜேந்திரன், அழகம்பெருமாள், காளி வெங்கட், மற்றும் பலர் நடிக்கவுள்ள இந்த படத்தில் சுனைனா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவாளராகவும், ரூபன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகின்றனர். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்த படம் 2016ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அரண்மனை நாயகி ஹன்சிகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நடிகர்களில் கமல், விஜய், மகேஷ்பாபு உள்பட பலர் குழந்தை நட்சத்திரத்திரமாக அறிமுகமாகி புகழ் பெற்றதை போல நடிகைகளில் ஸ்ரீதேவி, ஷாலினி மற்றும் பலர் குழந்தை நட்சத்திரம் முதல் ஹீரோயின் வரை புகழ் பெற்று வந்துள்ளனர்......

ஜீவாதான் என் அடுத்த படத்தின் நாயகன்- எம்.ராஜேஷ்

எம்.ராஜேஷின் இயக்கத்தில் ஆர்யாவின் 25வது படமான 'வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க' படம் வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீசாகவுள்ளது....

'காக்கி சட்டை' இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்தார் தனுஷ்

'வேலையில்லா பட்டதாரி, அனேகன், மாரி என தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்த தனுஷ், தற்போது 'விஐபி 2 படத்தில் நடித்து வருகிறார்.....

அஜீத், விஜய்யுடன் இணைந்தார் விக்ரம்

'தல அஜீத்' நடித்து வரும் 'தல 56' திரைப்படத்தின் அதிகாரபூர்வ டைட்டில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது......

மரண தண்டனை கைதியை காப்பாற்ற போராடும் பிரபல நடிகை

வட்டாரம், உன்னாலே உன்னாலே, பேராண்மை, ஜெயம்கொண்டான் போன்ற பல படங்களில் நடித்திருந்த நடிகை வசுந்தரா காஷ்யப்....