close
Choose your channels

கோவா, சீனாவில் 'விஜய் 59' படப்பிடிப்பு

Monday, August 10, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படம் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த படமான 'விஜய் 59' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.

'விஜய் 59' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கோவா மற்றும் சீனா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் தனது குரு ஷங்கரின் 'ஐ' திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டது என்பதால் அவரிடம் அட்லி கலந்தாலோசித்து, சீனாவின் முக்கிய லொகேஷன்களை கேட்டறிந்து சீனாவில் படமாக்கபட வேண்டிய லொகேஷன்களை சில நாட்களுக்கு முன்பே அவர் முடிவு செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், பிரபு, சமந்தா, எமிஜாக்சன், மகேந்திரன், ராதிகா, கே.எஸ்.ரவிகுமார், நான் கடவுள்' ராஜேந்திரன், அழகம்பெருமாள், காளி வெங்கட், மற்றும் பலர் நடிக்கவுள்ள இந்த படத்தில் சுனைனா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவாளராகவும், ரூபன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகின்றனர். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்த படம் 2016ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.