close
Choose your channels

விஜயகாந்த் உடல் அடக்கம் எங்கே எப்போது? குடும்பத்தினர் அறிவிப்பு..!

Thursday, December 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேமுதிக தலைவர் இன்று காலை 6.10 மணிக்கு காலமான நிலையில் அவரது உடல் அடக்கம் செய்யும் இடம் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக உடல் நல குறைவு காரணமாக விஜயகாந்த் அவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து நேற்று இரவு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை அவர் காலமானார்.

இந்த நிலையில் அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுமா? அல்லது சென்னையிலேயே அடக்கம் செய்யப்படுமா? என்ற கேள்வி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் இது குறித்து அறிவிப்பை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை அதாவது டிசம்பர் 29ஆம் தேதி மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். மேலும் இன்றும் நாளையும் கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் வைக்கப்படும் என்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Immerse Yourself in the Melodies of Vijayakanth!

Dive into the soulful tunes and timeless classics by Vijayakanth. Click the link below to access a curated compilation of his greatest hits!

Listen Now

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.