கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடம் தருகிறேன்: விஜயகாந்த் அறிவிப்பு.

கொரோனாவால் உயிர் இறந்தவர்களை அடக்கம் செய்ய குறிப்பாக கொரோனாவால் உயிரிழந்த டாக்டர்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஆந்திராவைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் சென்னையில் உயிரிழந்த நிலையில் அவருடைய உடலை அடக்கம் செய்ய அம்பத்தூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த மற்றொரு டாக்டரும் இன்று உயிரிழந்த நிலையில் அவரை அடக்கம் செய்யவும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து போலீசாரால் இன்று 20 பேர் கைது செய்யப்பட்டனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இறந்தவர்களை அடக்கம் செய்ய தனது ஆண்டாள் அழகர் கல்லூரியில் இடம் தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மனித நேயத்துடன் விஜயகாந்த் அறிவித்துள்ள இந்த அறிவிப்புக்கு பெரும் பாராட்டுகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

மே 3 வரை ஊரடங்கில் தளர்வு இல்லை: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

கொரோனாவால் இரண்டாம் கட்ட ஊரடங்கு வரும் மே மாதம் 3ஆம் தேதி முதல் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கேரளா உள்பட ஒருசில மாநிலங்களில் இன்று முதல் ஒருசில துறைகளுக்கு

சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் வௌவால்கள்!!! இதனால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்து என்ன???

சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் தேசிய வைராலஜி ஆராய்ச்சிக் கழகம் இரண்டும் இணைந்து தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் வாழ்கின்ற 25 வகையான வௌவால்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டன.

கொரோனாவால் உயிரிழந்த சென்னை மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு: 20 பேர் கைது

கொரோனா தொற்றால் உயிரிழந்த சென்னையை சேர்ந்த நரம்பியல் மருத்துவரின் உடலை புதைக்க அந்த பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களது கண்மூடித்தனமான தாக்குதலால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின்

கொரோனா விடுமுறையில் ஆன்லைனில் சினிமா கோர்ஸ் படிக்கும் ஜெயம் ரவி நாயகி!

இந்த கொரோனா விடுமுறையில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் வேடிக்கையான வினோதமான நகைச்சுவையான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து பொழுதை போக்கி வருகின்றனர்.

கொரோனா பரிசோதனைகள் - ரேபிட் கிட் : PCR இரண்டுக்கும் என்ன வித்தியாசம்???

ஒருவருக்கு கொரோனா இருக்கிறதா? இல்லையா என்பதை உறுதிச் செய்வதற்கு உலகம் முழுவதும் இரண்டு வகையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.