close
Choose your channels

திரையுலகில் இல்லாத விஜயகுமாரின் ஒரே மகள்!: வைரலாகும் புகைப்படங்கள்

Tuesday, July 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் குடும்பத்திலுள்ள அனைவருமே கிட்டத்தட்ட திரையுலகில் இருக்கும் நிலையில் அவரது ஒரே ஒரு மகள் மட்டும் திரை உலகிலிருந்து சம்பந்தம் இல்லாமல் இருக்கிறார் என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது

நடிகர் விஜயகுமார் நடிகை மஞ்சுளாவை கடந்த 1976ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் இவர்களுக்கு பிறந்தவர்கள்தான் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி என்பதும் இவர்கள் மூவருமே சினிமாவில் நாயகியாக நடித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

அதேபோல் விஜயகுமாரின் மூத்த மனைவி முத்துகன்னு என்பவருக்கு அருண்விஜய், கவிதா, அனிதா ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களில் அருண் விஜய் பிரபல நடிகராக உள்ளார் என்பதும் கவிதா என்பவர் சரத்குமார் நடித்த கூலி என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆனால் விஜய்குமாரின் மகளும் அருண்விஜய்யின் சகோதரியுமான அனிதா ஒருவர் தான் சினிமா துறையில் சம்பந்தமில்லாமல் உள்ளார். இவர் லண்டனைச் சேர்ந்த கோகுல கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகி விட்டார் என்பதும் இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அனிதா தனது குடும்பத்தினருடன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார் என்பதும் இந்த புகைப்படங்கள் வைரலாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.