close
Choose your channels

'டாக்டர்' படத்தின் புதிய அப்டேட்: 2 நிமிட வீடியோ வெளியீடு

Monday, July 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் ‘டாக்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் மீண்டும் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தில் புதிய அப்டேட் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது இரண்டு நிமிட வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதில் அனிருத், சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் ஆகிய மூவரும் ’டாக்டர்’ படத்தின் பாடல் குறித்து டிஸ்கஸ் செய்வது போன்றும் அனிருத் கோபித்துக் கொண்டு வெளியே செல்வது போன்றும் பின்னர் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வந்து பாட்டை கம்போஸ் செய்ய சொல்வது போன்றும் இந்த வீடியோ அமைந்துள்ளது.

காமெடியாக அமைக்கப்பட்டுள்ள இந்த வீடியோவின் இறுதியில் ’டாக்டர்’ படத்தின் ’செல்லமா’ என்று தொடங்கும் பாடல் ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடல் டிக் டாக் தடை பற்றிய பாடல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதால் இந்த பாடலில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது என்று கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.