சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கேப்டன்....!தொண்டர்கள் மகிழ்ச்சி....!

நேற்று(19.05.2021) அதிகாலை 3.30 மணியளவில், தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையான, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப்பின் விஜயகாந்த் அவர்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் இன்று மாலை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார் கேப்டன்.

தேமுதிக-வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கட்சியின் தலைவருமான விஜயகாந்த் அவர்கள் கடந்த சில வருடங்களாகவே, உடல் நலம் சரியில்லாமல் இருந்து வருகிறார். இதனால் அவர் அரசியலில் ஈடுபடாமல் வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார். அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் கூட, கட்சி பிரச்சாரத்திற்காக வெளியில் செல்லாமல் இருந்தார். குறிப்பிட்ட ஒரு தொகுதிக்கு மட்டும் சென்று கையசைத்து வாக்குகள் கேட்டார். நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் அமமுக-வுடன் கூட்டணி வைத்துக்கொண்ட தேமுதிக தோல்வியை தழுவியது. இதனால் அவ்வப்போது அரசியல் குறித்த ஒருசில அறிக்கைகளை வெளியிட்டு வந்தார் விஜயகாந்த்.

தற்போது மருத்துவமனையில் இருந்து கேப்டன் விஜயகாந்த் அவர்கள் குணமாகி வந்த செய்தி, தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

மே மாத மின்சார ரீடிங் எப்படி எடுப்பது? மின்வாரியம் அறிவிப்பு

மே மாதத்திற்கான மின்சார ரீடிங்கை மின் நுகர்வோரே எடுக்கலாம் என மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது.

கண்மணிகளை காப்பாற்றுங்கள்: தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்த கமல்ஹாசன்!

கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகள் மற்றும் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெற்றோர்களின் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும்

தமிழில் படிக்க வேண்டிய சிறந்த சரித்திர நாவல்கள்!

நாவல் இலக்கியத்தில் சரித்திர நாவல்களுக்கு ஒரு பெரிய மவுசு இருக்கத்தான் செய்கிறது.

வந்தாச்சு கொரோனா சுய பரிசோதனை கிட்....! ஒப்புதல் அளித்த ஐசிஎம்ஆர்...!

கொரோனா தொற்று உள்ளதா என வீட்டிலேயே தெரிந்துகொள்ள கோவிசெல்ஃப்டிஎம் என்ற, சுய பரிசோதனை

தடுப்பூசி போட்டும் கொரோனா வருதே? அப்போ தடுப்பூசி அவசியமா? பளீர் பதில்கள்!

பொதுவா வருமுன் காப்போம் என்ற அடிப்படையில்தான் தடுப்பூசிகள் போடப்படுகிறது.