மர்ம மனிதனின் பாடல் கம்போஸிங்கை தொடங்கிய ஹாரீஸ் ஜெயராஜ்

  • IndiaGlitz, [Saturday,January 09 2016]

சீயான் விக்ரம் தற்போது "ஸ்பிரிட் ஆப் சென்னை' என்ற வீடியோவை இயக்குவதில் ஒருபக்கம் பிசியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'அரிமாநம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கவுள்ள விக்ரமின் அடுத்த படத்தின் பாடல் கம்போஸிங் பணியை இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் நேற்று முதல் ஆரம்பித்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 10 முதல் தொடங்கவுள்ளது.

'மர்ம மனிதன்' என்ற டைட்டில் வைக்கப்படலாம் என்று கூறப்படும் இந்த படத்தில் முதல்முதலாக விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார். மேலும் நித்யாமேனன் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ஷிபுதமீன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்யவுள்ளனர்.

More News

உதயநிதி ஸ்டாலினின் 'கெத்து' படத்தின் சென்சார் விபரங்கள்

உதயநிதி ஸ்டாலின், எமிஜாக்சன் நடித்துள்ள 'கெத்து' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் ரிலீஸாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கின்றது...

வரும் பொங்கலுக்கு மூன்று 'U' மற்றும் ஒரு 'A'

வரும் பொங்கல் திருநாளில் கோலிவுட்டின் நான்கு முக்கிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன...

மீண்டும் இணைகிறது 'பாணா காத்தாடி' டீம்

கடந்த 2010ஆம் ஆண்டு பத்ரி வெங்கட் இயக்கத்தில் வெளிவந்த ''பாணா காத்தாடி'' என்ற படம் அதர்வா அறிமுகமாகிய படம் மட்டுமின்றி சமந்தாவுக்கும் கோலிவுட்டில் நல்ல பெயரை வாங்கித்தந்த முதல் படம்.

'வேதாளம்' கன்னட ரீமேக்கில் சூப்பர் ஸ்டார்

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த தீபாவளி தினத்தில் வெளியான 'வேதாளம்' திரைப்படம் சூப்பர்ஹிட் ஆகி ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது என்பது அனைவரும் அறிந்ததே....

தனுஷ்-பிரபுசாலமன் படத்தின் மிரட்டலான டைட்டில்

தங்கமகன்' படத்தை அடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ள இன்னும் பெயரிடப்படாத 'படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது....