close
Choose your channels

வரும் பொங்கலுக்கு மூன்று 'U' மற்றும் ஒரு 'A'

Friday, January 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் பொங்கல் திருநாளில் கோலிவுட்டின் நான்கு முக்கிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. தேசிய விருது பெற்ற பாலாவின் இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி சரத்குமார் நடித்த 'தாரை தப்பட்டை', பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்', பாண்டியராஜ் இயக்கத்தில் விஷால், கேதரின் தெரசா நடித்த 'கதகளி' மற்றும் திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், எமிஜாக்சன் நடித்த 'கெத்து' ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றது.

இந்த நான்கு படங்களுக்கும் தியேட்டர்கள் புக் ஆகி வரும் நிலையில் நான்கு படங்களுக்கும் சென்சார் சர்டிபிகேட் கிடைத்துவிட்டது. இதில் பாலாவின் 'தாரை தப்பட்டை' தவிர மற்ற மூன்று படங்களும் 'U'சர்டிபிகேட் பெற்றுள்ளது.

இயகுனர் பாலா சென்சார் அதிகாரிகள் கூறிய ஒருசில 'கட்'களுக்கு சம்மதிக்காததால் படத்திற்கு 'A'சர்டிபிகேட் கிடைத்துள்ளது. இருப்பினும் பாலாவின் ரசிகர்கள் அனைவரும் மெச்சூரிட்டி அடைந்தவர்கள் என்பதால் வசூலில் பாதிப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நான்கு படங்களுக்குமே நல்ல எதிர்பார்ப்பு இருப்பதாலும் தொடர் விடுமுறை காரணமாகவும் நான்கு படங்களும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.