close
Choose your channels

சீயான் விக்ரமின் அடுத்த படம் ஓடிடியில் ரிலீஸ்?

Friday, October 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சியான் விக்ரம் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் பல திரைப்படங்கள் ஓடிடியில் தான் ரிலீஸ் ஆனது என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போதும் ஒரு சில திரைப்படங்கள் அதிலும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் என்ற தகவல் திரையரங்க உரிமையாளர்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சியான் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ’மகான்’ திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாக இருப்பதாக வந்திருக்கும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கார்த்திக் சுப்பாராஜின் முந்தைய திரைப்படமான ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் அவருடைய அடுத்த திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.