close
Choose your channels

ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்ட விக்ரம் படம்.. ரிலீஸ் எப்போது?

Saturday, December 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடித்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான நிலையில் இந்த படம் தற்போது ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் ’கோப்ரா’. இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் திரைக்கு வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் மொத்தமே 40 கோடி தான் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் ’கோப்ரா’ திரைப்படம் தற்போது ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்டு டிசம்பர் 15ஆம் தேதி ரஷ்யாவில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.