close
Choose your channels

வைகைப்புயலை வீழ்த்தியதா மாண்டஸ் புயல்.. 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் முதல் நாள் வசூல்!

Saturday, December 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீண்ட இடைவேளைக்குப் பின்னர் வடிவேலு நடித்த ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது என்பதும் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே.

இதனையடுத்து ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று இந்த படம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் நேற்று தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கனமழை பெய்ததால் பெரும்பாலான திரையரங்குகளில் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.

இந்நிலையில் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் முதல் நாளில் ஒரு கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று மழை குறைந்துள்ள நிலையில் மீண்டும் இந்த படத்தின் வசூல் சூடுபிடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வடிவேலு முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, முனிஷ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். சுராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படம் உருவாகி உள்ளது.

இந்த நிலையில் வடிவேலு தற்போது ’மாமன்னன்’ மற்றும் ’சந்திரமுகி 2’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்கள் வெளியாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.