திடீரென 'தங்கலான்' படப்பிடிப்புக்கு செல்லாத விக்ரம்.. அதிர்ச்சி காரணம்..!

  • IndiaGlitz, [Wednesday,May 03 2023]

சியான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் மீண்டும் தொடங்கிய நிலையில் இந்த படப்பிடிப்பில் விக்ரம் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு முந்தைய ரிகர்சலின்போது விக்ரமுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து விக்ரம் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் புரோமோசனுக்கு விக்ரம் செல்ல வேண்டி இருந்ததால் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு சில வாரங்கள் ஒத்திவைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது ’பொன்னியின் செல்வன் 2’ படத்தின் புரோமோஷன் முடிவடைந்து ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மீண்டும் ‘தங்கலான்’ படத்தில் விக்ரம் கவனம் செலுத்தினார்.

நேற்று முதல் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் விக்ரம் அதில் கலந்து கொள்வார் என்றும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சி ஒன்றின் ரிகர்சலில் விக்ரம் ஈடுபட்டிருந்த போது அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் விக்ரம் அல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக தெரிகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் காயத்திலிருந்து விக்ரம் முழுமையாக குணமாகி விடுவார் என்றும் அதன் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது.

விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்யின் மகள் ஜனனி, மகனாக நடிப்பது யார் தெரியுமா? 'லியோ' படத்தின் சூப்பர் அப்டேட்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தில் அவரது மகளாக பிக்பாஸ் ஜனனி நடித்து வருவதாக கூறப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தளபதி விஜய்யின் மகனாக நடிக்கும்

முதல்முறையாக சிவகார்த்திகேயனுடன் இணையும் பிரபலம்.. கமல்ஹாசன் அறிவிப்பு..!

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது

நீங்களே இப்படி செய்யலாமா? 65 வயதில் 16 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட மேயர்!

பிரேசில் நாட்டைச் சேர்ந்த நகர மேயர் ஒருவர் 65 வயதில் 16 வயது சிறுமியைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இது ஒரு டார்ச்சர் டைம்.. நடிகை சமந்தா எதில் குளிக்கிறார் பாருங்க.. வைரல் புகைப்படம்..!

நடிகை சமந்தா ஐஸ் பாத் எடுக்கும் புகைப்படத்தை பதிவு செய்து 'இது ஒரு டார்ச்சர் டைம்' என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ள புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய வேண்டாம்.. தமிழக அரசுக்கு அலர்ட் விடுத்ததா உளவுத்துறை?

'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம் வரும் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்