close
Choose your channels

முதல்முறையாக சிவகார்த்திகேயனுடன் இணையும் பிரபலம்.. கமல்ஹாசன் அறிவிப்பு..!

Wednesday, May 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பின்படி இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த வீடியோவை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. சிவகார்த்திகேயன் படத்திற்கு முதல் முறையாக ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருக்கும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.