close
Choose your channels

'தங்கலான்' படத்தில் நடிக்கும் விக்ரமுக்கு இத்தனை கோடி சம்பளமா?

Friday, February 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’தங்கலான்’. கோலார் தங்க வயல் குறித்த கதை அம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் இந்த படத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர் டானியல் கால்டாகிரோன் என்பவர் இணைந்தார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் ’தங்கலான்’ படத்திற்காக அதிக அளவு கால்ஷீட் கொடுத்துள்ள விக்ரம் மிகப்பெரிய சம்பளத்தை பெற்று இருப்பதாகவும் இதுவரை விக்ரம் வாங்கிய சம்பளத்தில் இந்த படத்தின் சம்பளம் தான் மிக அதிகம் என்றும் கூறப்படுகிறது. அதாவது ’தங்கலான்’ படத்திற்காக விக்ரம் வாங்கிய சம்பளம் 28 கோடி என்று கூறப்படுகிறது.

விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க வயல் குறித்த கதையும் கொண்ட இந்த படம் நிச்சயம் தமிழ் சினிமாவின் வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.