'விஐபி 2' அதிகாலை காட்சி திடீர் ரத்து! காரணம் என்ன?

  • IndiaGlitz, [Thursday,August 10 2017]

தனுஷ், அமலாபால், கஜோல் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஐபி 2' திரைப்படம் வரும் வெள்ளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படம் ஒருசில திரையரங்குகளில் வெள்ளியன்று அதிகாலை 5 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் தற்போது திடீரென 5 மணி காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் உள்ள முன்னணி திரையரங்கின் நிர்வாகத்தினர் வெளியிட்ட அறிக்கையில், 'தனுஷின் 'விஐபி 2' படத்தை அதிகாலை 5 மணி காட்சி திரையிட தயாரிப்பாளரிடம் இருந்து அனுமதி பெற்றிருந்தோம், ஆனால் தற்போது இந்த படம் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெளியாக வேண்டும் என்று தயாரிப்பாளர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அவரது விருப்பத்திற்கு மதிப்பு அளித்து அதிகாலை 5 மணி காட்சியை ரத்து செய்கிறோம். 'விஐபி 2' திரைப்படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு தொடங்கும். 5 மணி காட்சிக்கு முன்பதிவு செய்தவர்கள் 8 மணி காட்சியை பார்க்கலாம், அல்லது விருப்பம் இல்லாதவர்கள் பணத்தை ஆன்லைன் மூலம் திரும்ப பெற்று கொள்ளலாம்' என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

ஓவியாவுக்கு பதிலாக புதிய நட்சத்திரம்: களைகட்டுமா பிக்பாஸ்?

கடந்த சில வாரங்களாக தமிழக மக்களை பெரிதும் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் களையிழந்து காணப்படுகிறது...

சிகிச்சை மறுக்கப்பட்ட தமிழர் குடும்பத்தினர்களிடம் மன்னிப்பு கேட்ட கேரள முதல்வர்

தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்ற கூலித்தொழிலாளி கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் பணிபுரிந்து வந்தார்...

அதிமுக அம்மா அணியில் இருந்து சசிகலா-தினகரன் நீக்கம்: முதல்வர் பழனிச்சாமி அதிரடி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக அதிமுக பிரிந்த நிலையில் சசிகலா அணி கடந்த சில மாதங்களாக மேலும் பிரிந்து ஈபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி என உடைந்தது.

விஷாலின் 25வது படத்தின் பூஜை! ரூ.6 கோடி செலவில் பிரமாண்டமான செட்

விஷால் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' மற்றூம் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் 'இரும்புத்திரை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

சமந்தா-நாகசைதன்யா திருமண அழைப்பிதழ் இதுதான்

பிரபல நடிகை சமந்தாவுக்கும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட நிலையில் வரும் அக்டோபர் மாதம் இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெறவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்