close
Choose your channels

'விஐபி 2' அதிகாலை காட்சி திடீர் ரத்து! காரணம் என்ன?

Thursday, August 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ், அமலாபால், கஜோல் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஐபி 2' திரைப்படம் வரும் வெள்ளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படம் ஒருசில திரையரங்குகளில் வெள்ளியன்று அதிகாலை 5 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் தற்போது திடீரென 5 மணி காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் உள்ள முன்னணி திரையரங்கின் நிர்வாகத்தினர் வெளியிட்ட அறிக்கையில், 'தனுஷின் 'விஐபி 2' படத்தை அதிகாலை 5 மணி காட்சி திரையிட தயாரிப்பாளரிடம் இருந்து அனுமதி பெற்றிருந்தோம், ஆனால் தற்போது இந்த படம் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெளியாக வேண்டும் என்று தயாரிப்பாளர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அவரது விருப்பத்திற்கு மதிப்பு அளித்து அதிகாலை 5 மணி காட்சியை ரத்து செய்கிறோம். 'விஐபி 2' திரைப்படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு தொடங்கும். 5 மணி காட்சிக்கு முன்பதிவு செய்தவர்கள் 8 மணி காட்சியை பார்க்கலாம், அல்லது விருப்பம் இல்லாதவர்கள் பணத்தை ஆன்லைன் மூலம் திரும்ப பெற்று கொள்ளலாம்' என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.